Thursday, April 2, 2009

இருளில் நீ தவிக்கும் குரல் கேட்டு...

என்னை உருக்கி ஒளி தந்தேன்
உந்தன் வாழ்வில் வெளிச்சம் வர
உருகும் போதும் நான் தவித்தேன்
உன் பார்வை எந்தன் மேலே பட
ஒளியால் ஏற்பட்ட மகிழ்ச்சியில்
என் நினைவோ உனக்கு வரவில்லை
நான் அனைந்த பின்பு நீ பார்த்தாய்
உன்னை திரும்பி பார்க்க எனக்கு உயிரில்லை...

இப்படிக்கு
மெழுகுவத்தி

No comments:

Page copy protected against web site content infringement by Copyscape
 
Creative Commons License
Srini Speaks by Srinivasan R is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.