உன் உளியால் செதுக்கி என்னை சிற்பமாய் மாற்றினாய்
கண் மூடி கிடந்தேன் என் வாழ்வினிலே
மெழுகாய் உருகி உன் ஒளியால் என்னை வழிநடத்திநாய்
எவ்வாறு உன் கடன் தீர்ப்பேன் இந்த பிறவியிலே
என்று உன்னை கேட்க
தான் பெற்ற ஒளியை பூமிக்கு இரவில் பகிரும் நிலவை போல்
நான் தந்த அறிவை பகிர்ந்து கொள் என்றாய்.
தலை வணங்குகிறேன் உனக்கு...உன் சிந்தனைக்கு

