Saturday, November 29, 2008

தீவிர...வாதம்

என் குருதியின் நிறமும் சிவப்புதான் என்பதை
உன் தோட்டாவினால் தெரிந்து கொள்ள வெண்டுமா?
மண்ணில் மனிதனால் வரையபட்டிருக்கும் கோட்டை மாற்ற
மனித உயிர்தனை போக்க வேண்டுமா?
வெறும் வார்த்தையினால் தீர்க்ககூடிய பிரச்சனைக்கு
தீவிரவாதம் தான் தீர்வாகுமா?

Wednesday, November 5, 2008

என் இனிய தேவதையே

இரும்பை ஈர்க்கும் காந்தத்தை போல்
என்னை உன்னிடம் ஈர்க்கிறாய்
என் அருகில் இருக்கும் நேரமெல்லம்
உன் அன்பை என் மீது பொழிகிறாய்
ஓரக்கண் பார்வையினால்
என் உயிரை தீண்டிச் செல்கிறாய்
ஞானக்கண் இருப்பது போல்
என் நினைவரிந்து நடக்கிறாய்
கண் தூங்கும் நேரத்தில்
கனவில் வந்து கொய்கிறாய்
உறங்காமல் நான் இருந்தால்
உன் உறக்கம் துறக்கிறாய்
என் கண்கள் கலங்கும் முன்
நீ கண்ணீர் சுறக்கிராய்
நான் விடுக்கும் புன்சிரிப்பில்
உன் உலகம் மறக்கிறாய்
நாள் தோறும் என் நினைவை
உன் நெஞ்சில் சுமக்கிறாய்
நான் செல்லும் பாதையினில்
என் கை கோர்த்து வருகிறாய்
என் உயிரோடு ஒன்றினைந்து உறவாடும் தேவதையே
என் செய்வேன் நான் உனக்கு
அதை கூறு நீ எனக்கு
Page copy protected against web site content infringement by Copyscape
 
Creative Commons License
Srini Speaks by Srinivasan R is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.